நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து ஹிட்

மலையாள திரைப்படங்களில் மூலம் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்களில் கொடுக்காத வெற்றி இவருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் கிடைத்தது. பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. தற்போது மலையாளத்தில் “கிங் ஆப் கோதா” படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார்.

வைரல் ட்வீட்

இந்நிலையில், யூடியூப் இந்தியா என்ற டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் விஜய் உங்களுக்கு ஃபோன் செய்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த பதிவை பார்த்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி; “ஓய் தளபதி எனக்கு எப்போ ஓகே சொல்ல போறீங்க “என்று டுவீட் செய்துள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இவரது பதிவிற்கு பலர் தங்களது கருத்துக்களை கமெண்ட் மூலம் பதிவிட்டு வருவதுடன் காமெடியான கருத்துக்களையும் பதிவிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here