சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிகை சோனியா போஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

புதிய தொடரில் சோனியா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சோனியா போஸ், சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் பிரபலமானவர். பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடரான “சபாஷ் மீனா” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சோனியா.

மீண்டும் என்ட்ரி

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் “சபாஷ் மீனா” என்ற தொடரில் இரண்டு மகள்களுக்கு தாயாக சோனியா போஸ் நடிப்பதாக கூறப்படுகின்றது. தொடர்களில் பிரபலமான நடிகர் அபிஷேக் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனந்த ராகம் தொடரில் பிரபலமான நடிகை இந்து சவுத்ரி இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இலக்கியா என்ற தொடரின் மூலம் பிரபலமான நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நடிப்புக்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்திருந்த நடிகை சோனியா போஸ் இந்த தொடரின் மூலம் தற்போது மீண்டும் நடிக்க திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here