விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பரிசாக “குஷி” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் குஷி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “என் ரோஜா நீயா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் படு தோல்வி அடைத்தது. இதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிவா நாராயணா எழுதி, இயக்குகிறார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் சமந்தாவுக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

பிறந்தநாள் பரிசு

குஷி திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நா ரோஜா நுவ்வே’ என்ற ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. இதே பாடல் தமிழில் ‘என் ரோஜா நீயா’ என்று தொடங்குகிறது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூப்பர் மெலடியாக உருவாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் பரிசாக இந்த பாடல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இவர் நடித்த படமும் தோல்வியடைந்துள்ளதால் இந்த படத்தின் வெற்றிக்காக காத்துகொண்டு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here