குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கோவாவிற்கு சென்று ஆட்டம் போட்டுள்ளார் நடிகை ஷெரின்.

ஷெரின் எலிமினேட்

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கக்கூடியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது. விதவிதமான டாஸ்க்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே சமயம் எலிமினேஷனும் நடந்து வருகின்றது. கடந்த வாரம் எபிசோடில் நடிகை ஷெரின் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக்கப்பட்டார்.

கோவாவில் கொண்டாட்டம்

எலிமினேட்டான கையோடு தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் ஷெரின். எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஷெரின், தனது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகை ஷெரின், பல தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமா வாய்ப்பை நழுவ விட்டார். அதன் பிறகு பிக் பாஸில் பங்கேற்று பிரபலமானார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நடிகை ஷெரின் தற்போது பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here