சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரம்

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இந்த படத்தில் அஜித்துடன் நடித்ததற்கு பிறகு அஜித்தின் ரீல் மகள் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா தற்போது ஹீரோயினாக நடிக்க பல இயக்குநர்களிடம் கதைகளையும் கேட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை அனிகா சுரேந்தர், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்நிலையில் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அதில் செல்வி நந்தினி 16.07.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணிக்கு அகால மரணம் அடைந்தார் என்று போடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த போஸ்ட்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அதன் பிறகு தான் இது படத்திற்காக அச்சடிக்கப்பட்ட ஒரு போஸ்டர் என்று அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here