நடிகர் விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற “லவ் டுடே” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

முக்கியமான வெற்றி

1997 ஆம் ஆண்டு விஜய்,சுவலக்ஷ்மி, மன்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சில தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய் கெரியருக்கு இந்த திரைப்படத்தின் வெற்றி மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பல வெற்றி படங்கள் அமைந்தது.

சூப்பர் ஹிட் படம்

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படமாக இருந்த லவ் டுடே படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுத்ரி தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைத்தவர் சிவா. இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரகுவரன், கரண், ஸ்ரீமன், உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். “லவ் டுடே” திரைப்படம்100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அது மட்டும் இல்லாமல் மூன்று கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. இந்த வெற்றி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் #26yearsoflovetoday என்ற ஹேஸ் டேக்கை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here