நடிகை திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ டீம் பிரத்யேக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் திரிஷாவின் 40வது பிறந்தநாளை அவரும், அவரது ரசிகர்களும் நேற்று கோலாகலமாக கொண்டாடினார்கள். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், திரிஷாவின் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது லியோ படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஸ்பெஷல் போட்டோ

லியோ படத்தின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை திரிஷா. இதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா “சவுத் இந்தியன் குயின்” என்ற கெத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் திரிஷாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக லியோ படக்குழுவினர் பிரத்யேக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜயிடம் ஜோடியாக நிற்கும் திரிஷாவின் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த நடிகை திரிஷாவும் லியோ தயாரிப்பு நிறுவனத்திற்கும், பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here