ஹிருதயம் படத்தில் இடம்பெற்றுள்ள “தர்ஷனா” பாடல் 111 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

வசூல் சாதனை

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ், மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஹிருதயம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. மலையாளத்தில் தயாரிப்பக்கப்பட்ட இந்த திரைப்படம், ரொமான்டிக் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூ.80 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பின்னுக்கு தள்ளியது

ஹிருதயம் படத்தில் ஹேசம் அப்துல் வகாப் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக “தர்ஷனா” என்ற பாடல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடல் 111 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பெருமளவு வரவேற்பு பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் பாடல் 110 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தை பிடித்த மலையாள பாடல் என்கின்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது ஜிமிக்கி கம்மல் பாடலின் சாதனையை முறியடித்து 111 மில்லியன் பார்வைகளை தர்ஷனா பாடல் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here