ஜெயிலர் பட ரிலீஸ் தேதியை டீஸருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. சமீபத்தில் மங்களூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதன் பிறகு சென்னை, கடலூர், கொச்சி, ஹைதராபாத் என பல இடங்களில் நடந்து வந்த ஜெயிலர் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஆக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஜெயிலர் ரிலீஸ் தேதியை டீசருடன் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here