அயோத்தி படத்தில் நடித்து பிரபலமான நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கவினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எகிறிய மார்க்கெட்

டாடா வெற்றிக்குப் பிறகு கவினுக்கு மார்க்கெட் எதிரி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பல படங்களில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நடிகர் கவின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் சதீஷ் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளது படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

நாயகி ஒப்பந்தம்

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் அயோத்தி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ராணி தற்போது கவினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ‘ஊர் குருவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here