நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு விக்கி – நயன் ஜோடி தனித்தனியாக வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

தனி தனி வாழ்த்துக்கள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கக்கூடிய விக்கேஷ் சிவனும், அவரது மனைவி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது வாழ்த்துக்கள் தற்போது சமூக வலைதளத்தில் பேச்சு பொருளாக மாறி உள்ளது. நட்சத்திர ஜோடிகளாக இருக்கக்கூடிய விக்கி – நயன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் தனித்தனியாக அஜித்துக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நயன்தாரா பதிவிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமையும்” என பதிவிட்டு, “விடாமுயற்சி” படத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல் விக்கியும் தனது டுவிட்டரில் அஜித்துக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சியும். எல்லையில்லா அன்பு என்றும் நிரந்தரம்” என பதிவிட்டுள்ளார். மேலும் “விடாமுயற்சி” வெற்றி பெறும் என அஜித் உட்பட மொத்த பட குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்கி.

நழுவிய வாய்ப்பு

அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. ஆனால் கதையில் பல சொதப்பல்கள் இருந்ததால் அந்த வாய்ப்பை விக்னேஷ் சிவன் நழுவ விட்டார். அதனால் அஜித் மீது விக்னேஷ் சிவன் கோபத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதை அனைத்தையும் மறந்துவிட்டு அஜித்தின் பிறந்தநாளுக்கு விக்கி – நயன் இருவரும் வாழ்த்துக்கள் கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here