சமூக வலைத்தளத்தில் ஏஜென்ட் படத்தை ட்ரோல் செய்பவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார் நடிகை அமலா.

கலவையான விமர்சனம்

நாகார்ஜுனா – அமலா ஜோடியின் மகன் அகில் நடிப்பில் ஏஜென்ட் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், ஆக்சன் காட்சிகள் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள ஏஜென்ட் திரைப்படத்தில், அகிலுடன் இணைந்து மம்முட்டி, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார்.

மகனுக்கு சப்போர்ட்

இந்த திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருபவர்களுக்கு நடிகை அமலா பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்; “ட்ரோல் என்பது பாதுகாப்பின்மை மற்றும் சாதிக்க வேண்டும் என்ற தேவையின் காரணமாக வருகிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஏஜென்ட் படத்தை பார்த்தேன், ரசித்தேன். குறைபாடுகள் இருந்தாலும் திறந்த மனதுடன் பார்த்தால் படம் நன்றாக வந்துள்ளது. நீங்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தான் இருக்கிறது. நான் பார்த்த திரையரங்குகளில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் வந்து பார்த்தார்கள். ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here