கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

விடுமுறை

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3 ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30 ஆம் தேதியும் நிறைவடைந்தது. இதனைதொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாளை முதல் 1-9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திறப்பு எப்போது?

இந்த நிலையில், கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; “கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024ம் ஆண்டு மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8ம் தேதியும் தொடங்கும்”. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here