கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வரும் திஷா பதானியின் வீடியோ தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

சூர்யா ஜோடி

ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தற்போது ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த திஷாவிற்கு, ஆரம்பத்தில் எம்.எஸ். தோனி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் திஷா. தீவிர உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்.

சர்ச்சையில் சிக்கிய திஷா

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடந்து வருகின்றது. அங்கு கங்கை நதியில் மாலை நேரத்தில் பூஜை செய்த திஷா பதானி வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் அணிந்திருந்த உடை தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. கோவிலுக்கு குட்டையான டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து பூஜையில் ஈடுபட்டதாக கூறி அவரது மேல் பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். திஷாவின் இந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவியதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here