சென்னையில் நடைபெற்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் கண்டு ரசித்தனர்.

சென்னை அணி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரண்களை எடுத்தது. அதன்பிறகு ஆட்டத்தை துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

குடும்பமாக ஆஜர்

இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியை நடிகைகாள் கீர்த்தி சுரேஷ், திரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் நேரில் கண்டு ரசித்தனர். சொப்பன சுந்தரி படக் குழுவினர் கிரிக்கெட் போட்டியை பார்த்த புகைப்படங்களும் வெளியாகின. அதேபோல் நேற்று நடந்த போட்டியை கேப்டன் மில்லர் படக்குழுவினர் கண்டு ரசித்தனர். இவர்களுடன் பிரியங்கா மோகன், அஜித்தின் மகன் ஆத்விக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். அஜித்தின் குடும்ப புகைப்படங்களும், பல நட்சத்திரங்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு, தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here