மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் மம்முட்டியின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

தமிழிலும் வெற்றி

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் மம்முட்டி. 70களில் நடிக்கத் துவங்கிய இவர் இன்று வரை மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ‘மௌனம் சம்மதம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் மம்முட்டி. அழகன், தளபதி, புதையல், அரசியல், மறுமலர்ச்சி, எதிரும் புதிரும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தாயார் மரணம்

இதுவரை 420 படங்களுக்கு மேல் நடித்துள்ள மம்முட்டிக்கு கேரளாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று அதிகாலை காலமானார். 93 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை செம்ப் முஸ்லீம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தாயார் இறந்த செய்தியை கேட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை மம்மூட்டிக்கு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here