நானி நடிப்பில் சூப்பர் ஹிட்டான தசரா திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

வசூல் சாதனை

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு குரி தயாரித்திருந்தனர். ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். தசரா திரைப்படத்தில் நானி கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சமுத்திரகனி, சாய்குமார், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்தது.

OTT ரிலீஸ்

மிகப்பெரிய பொருட்ச அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் உலக அளவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டியத்தை சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் உச்சகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here