சிட்டாடல் வெப் தொடர் குழுவினர் பார்ட்டியில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.

புதிய வெப் தொடர்

ஹாலிவுட்டின் இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்தொடரான ‘சிட்டாடல்’ தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது. தொடரின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி

முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர், டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில் பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள் நிறைந்த ஸ்பை யூனிவர்சின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ் & டிகே மற்றும் சீட்டடெல் இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீதா ஆர்.மேனன் ஆகியோருடன் சேர்ந்து வருண் தவான், சமந்தா ரூத் பிரபு உட்பட அனைத்து உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

பார்ட்டியில் சமந்தா

6-எபிசோட் அடங்கிய தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இரண்டு எபிசோடுகள் ஏப்ரல் 28 அன்று வெளியாகும் அதைத் தொடர்ந்து மே 26 வரை வாரந்தோறும் ஒரு எபிசோட் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இதர சர்வதேச மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்த வெப் தொடரின் பிரீமியர் ஷோ நேற்று பிரமாண்டமாக நடந்ததை முன்னிட்டு, செம பாட்டியும் நடைபெற்றுள்ளது. இரவு விருந்து மற்றும் பார்ட்டி புகைப்படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமந்தா நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது தொடர்ந்து தனது முழு கவனத்தையும் இந்த வெப் தொடரில் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த ‘ஃபேமிலி மேன்’ வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த ‘சிட்டாடல்’ மீது மிகுந்த ஆவல் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here