பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சுஜிதா தனுஷ் இன்ஸ்டாவில் பல அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் குழந்தையாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர் சுஜிதா தனுஷ். கிட்டதட்ட 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை சுஜிதா. 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் ஒளிபரப்பான “ஒரு பெண்ணின் கதை” என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு உறவுகள், சன் டிவியில் ஒளிபரப்பான கணவருக்காக தொடர்களின் மூலம் இவர் சீரியல்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கிட்டதட்ட 40க்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ள இவர், ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கீதாஞ்சலி என்ற தொடரிலும் மௌன ராகம் என்ற தெலுங்கு தொடரிலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் டிவி தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அழகான புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணியாக நடித்து வரும் சுஜிதா, தனது கணவரின் மூன்று தம்பிகளையும் வளர்க்கிறார். ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் தொடராக இருக்கக்கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சுஜிதா, அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் அதிகம் புடவையிலேயே புகைப்படம் வெளியிடுவார். சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்களையும், ஹார்ட்டின்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here