நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பார்ட்டியில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னணி நடிகர்

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இந்த ஒரு படத்தின் ஹிட்டே இவரை முன்னணி நடிகராக வலம் வர உதவியது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார் ஜெயம் ரவி. 2009 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். காதல் ஜோடிகளாக இருந்து வரும் இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார் ஆர்த்தி. அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியின் பிறந்த நாளை பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்து மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆர்த்தியின் பிறந்தநாள் பார்ட்டியில் துல்கர் சன்மான், கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, சாந்தனு, பிருந்தா மாஸ்டர், நடிகர் வைபவ் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆர்த்திக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த முடித்துள்ளார் ஜெயம் ரவி. இதன் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here