நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர் தோல்விகள்

2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கிய இந்த படத்தில் ஜீவா, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதைதொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தில், விஜய், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்னர் மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வரும் பூஜா, தற்போது மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சல்மான் கானுக்கு ஜோடியாக ‘கிசிகா பாய் கிசிகா ஜான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சிங்கிளா இருக்க பிடிக்கும்

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்வதாகவும், இருவரும் அடிக்கடி வெளியே செல்வதாகவும் சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகள் பூஜா ஹெக்டே காதுகளில் பட,வர் தன் பக்க விளக்கத்தை கொடுத்திள்ளார். “அதாவது என்னைப் பற்றி அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். அது தான் எனக்கு பிடிக்கும். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். என் மீதான வதந்திகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை” என்று கூறியுள்ளார். தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ‘கிசிகா பாய் கிசிகா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருவதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் புகைப்படத்தை பார்த்து இவ்வாறு செய்திகள் பரவுகின்றது என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here