இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் சமீபத்தில் எடுத்த தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நல்ல வரவேற்பு

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி. மருத்துவரான இவர், மருத்துவ தொழிலில் முழுவதுமாக ஈடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த ஷங்கருக்கு, அதிதி நடிகையாக வேண்டும் என்று ஆசை வைத்திருப்பது பெரிய ஷாக் தான். அப்பாவாக மகளின் ஆசையை நிறைவேற்றினார் ஷங்கர். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அதிதிக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் கூட படத்தை விட அதிதிக்கு அதிக பிரமோஷன் இருந்ததாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து இருந்தனர். இவரது நடிப்பு, அழகுக்கு கிடைத்த வரவேற்பா? அல்லது ஷங்கரின் மகள் என்பதால் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததா? என்று சொல்ல முடியாத அளவிற்கு சோஷியல் மீடியாக்களில் அதிதியின் பேச்சும், வீடியோக்களும் வேகமாக பரவியது.

அசத்தும் அதிதி

ஆரம்பத்தில் இருந்தே சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய அதிதி, சமீபத்தில் சிவப்பு நிற குட்டி கவுனில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அதிகம் ஒற்றை காலிலே நிற்கிறார். அதை பார்த்து ரசிகர்கள், ஒற்றைக்காலில் நிற்பது அதிதிக்கு ரொம்ப பிடிக்குமோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இவரது அழகை புகழ்ந்தும், வர்ணித்தும் கமெண்ட் செய்கின்றனர். அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அதிதி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விளம்பரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபல துணிக்கடை விளம்பரத்திலும் நடித்து அசத்தியுள்ளார் அதிதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here