சோஷியல் மீடியா மூலம் பிரபலமான ஜி.பி. முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் “தலைவருக்கு என்ன ஆச்சு’ எனப் பதிறிப்போய் உள்ளனர்.

யூடியூப் பிரபலம்

சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மட்டுமே அதிகமாக சோஷியல் மீடியாக்களை பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. தற்போது ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் தனி நபரும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி கொண்டே இருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோஷியல் மீடியாக்களில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். ரீல்ஸ் வீடியோ, சமூக கருத்துக்கள், ஹோம் டூர் என்று அனைத்தையும் தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியா மூலம் ஒவ்வொரு விஷயங்களையும் அப்டேட் செய்து கொள்கின்றனர். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு வீடியோ டிரெண்ட் ஆனாலே அவர்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி

அந்த வகையில் யூடியூபில் வீடியோ மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி.பி. முத்து. “சாவுலே, செத்த பயலே” உள்ளிட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி டிரெண்டிங்கில் இருந்த ஜி.பி. முத்து, இணையதள வாசிகளிடம் மிகவும் பிரபலமானார். இணையதளத்தில் பிரபலமான இவர், விஜய் டிவியின் பிக் பாஸிலும் பங்கேற்றார். ஆனால் தனது குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி போன வேகத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டார். தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ள ஜி.பி. முத்து “பம்பர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றி, சிவானி நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் பம்பர் திரைப்படத்தில் ஜிபி முத்து இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆவலை கூட்டியுள்ளது. சோஷியல் மீடியா மூலம் பிரபலமாக முடியும் என்று நிரூபித்த ஜி.பி. முத்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ஜி.பி. ரசிகர்கள் “என்ன தலைவரே, என்ன ஆச்சு?” என்று நலம் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here