நடிகர் அர்னால்டு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மனம் கவர்ந்த நடிகர்

டெர்மினேட்டர் என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் அர்னால்டு. ஹாலிவுட்டில் நடித்து பிரபலமானாலும், சினிமா ரசிகர்களுக்கு இவர் மிகவும் பிடித்த நடிகர் ஆவார். நடிகர் அர்னால்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ரியல் டெர்மினேட்டர்

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது. அந்த பள்ளத்தில் சாலையில் செல்லும் கார்கள், சைக்கிள்கள் அடிக்கடி மாட்டிக் கொள்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருந்த பள்ளத்தை, eனது குழுவினருடன் சேர்ந்து சரி செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.ர்னால்ட்டின் இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதுடன், அவரது செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. 75 வயதாகும் அர்னால்ட், தனது உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்து இதுபோல் பொதுப்பணிகளும் ஈடுபட்டு வருவதால் ரசிகர்கள் இவருக்கு ரியல் டெர்மினேட்டர் என்று கூறி பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here