நடிகர் விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தமிழன் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழன் வெற்றி

இயக்குனர் மஜீத் இயக்கத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் தமிழன். உலக அழகி பட்டம் வென்ற பிறகு தமிழன் படத்தில்தான் பிரியங்கா சோப்ரா நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரேவதி, நாசர், விவேக், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர். இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழன் திரைப்படத்தின் மூலம் தான் டி.இமானும் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். இவரது இசையமைப்பில் வெளியான முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்ததால், அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

21 ஆண்டுகள் நிறைவு

இன்று தனது கேரியரில் பல மடங்கு முன்னேறி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் டி.இமான். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் கெரியருக்கும் தமிழன் படமும் முக்கிய பங்கு உள்ளது. விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தமிழன், யூத், பகவதி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் விஜய். தமிழன் படத்தில் வக்கீலாக நடித்திருந்த விஜயின் நடிப்பும், டயலாக் டெலிவரியும் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. சூப்பர் ஹிட் படமாக அமைந்த தமிழன் திரைப்படம் வெளியாகி இன்றும் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலும் டி.இமானின் 21 ஆண்டுகள் திரைப்பயணத்தை தொடர்ந்து ரசிகர்கள் #21yearsofthamizhan என்ற ஹேஷ் டேக்கை சோசியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here