90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினியான பெப்சி உமா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாங்க பழகலாம்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருப்பவர் பெப்சி உமா. இவரது முழு பெயர் உமா மகேஸ்வரி. பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் இவரை பெப்சி உமா என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே தொகுப்பாளினியாக அறிமுகமான பெப்சி உமா, முதன்முதலில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வாங்க பழகலாம்” என்ற நிகழ்ச்சி மூலம் தனது கெரியரை தொடங்கினார். “வாங்க பழகலாம்” நிகழ்ச்சி வெற்றிபெற்ற பிறகு தான் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பெப்சி உமா.

அப்படியே இருக்காங்களே

பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் உமாவின் சிரிப்பும், பேச்சும், புடவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். வார இறுதியில் ஒளிபரப்பாகும் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் டாப் தொகுப்பாளர்களாக இருந்து வந்த “நீங்கள் கேட்ட பாடல்” விஜய் சாரதி, ரத்னா ஆகியோர் மறக்க முடியாத தொகுப்பாளர்களாக வலம் வந்தனர். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற பெப்சி உமா, ரத்னா, விஜய் சாரதி மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பெப்சி உமா அன்று பார்த்தது போலவே இன்றும் ஜொலிக்கிறார் என்று பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here