நடிகை ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதிக்கு சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர்களின் வாரிசு

80களில் கொடி கட்டி பறந்த நடிகை நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது தந்தை தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் அவருக்கு நட்சத்திர வாரிசு அந்தஸ்தும் அதிகமாவே உள்ளது. ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி. ஹிந்தியில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது டோலிவுடிலும் அறிமுகமாகியுள்ளார். ஜூனியர் என்டிஆர்-இன் 30வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். கொரட்டலா சிவா இயக்கும் என்டிஆர் 30 படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை இருக்கிறார்.

காதலில் ஜான்வி

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் தனது ஆண் நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஷிகர் பஹாரியா, மராட்டிய முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஆவார். ஜான்வி கபூர், ஷிகர் இருவரும் காதலிப்பாகவும், அடிக்கடி வெளியே செல்வதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here