ந்டிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 4 மில்லியன் ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்துள்ளனர்.

சைலன்ட் நடிகர்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விஜய். இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்தாலும், நிஜத்தில் இருப்பது போல் சோஷியல் மீடியாவிலும் சைலன்ட்டாகவே இருக்கக் கூடியவர். இதுவரை வெறும் டுவிட்டரை மட்டுமே பயன்படுத்தி வந்த விஜய் தற்போது இன்ஸ்டாவிலும் இணைந்துள்ளார்.

குட்டி ரசிகை

நடிகர் விஜய் தமிழ் நடிகராக இருந்தாலும் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். பல மொழிகளில் இருக்கும் நடிகர்களுக்கும் இவர் ஃபேவரட்டான நடிகராக இருந்து வருகிறார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது அடுத்த தலைமுறையினரையும் ரசிகர்களாக வைத்துள்ள விஜய், சமீபத்தில் கூட தனது குட்டி ரசிகைக்கு சர்ப்ரைஸ்சாக வீடியோ கால் செய்து பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

எகுறும் ஃபாலோவர்ஸ்

முன்னணி இயக்குநர்கள் முதல் புது இயக்குனர்கள் வரை அனைவருக்கும் தனது படங்களில் பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து வரும் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்த நடிகர் விஜயை 44 லட்சம் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக டுவிட்டரில் இருந்தாலும் குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டுமே போட்டு வருவார். அந்த வகையில் தற்போது இன்ஸ்ட்டாவில் இணைந்துள்ள விஜய், ஒரே ஒரு பதிவை மட்டுமே போட்டுள்ளார். அந்த ஒரு பதிவிற்கு 4.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது. இன்ஸ்டாவில் இணைந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், 4 மில்லியன் ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்துள்ளனர். இதனால் #thalapathyoninstagram என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த சந்தோஷத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here