தனது டுவிட்டர் அக்கவுண்ட் மீட்டெடுக்கப்பட்டதை டுவிட் மூலம் கூறியுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் ஹேக்கர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நயனுடன் காதல்

கடந்த 2012 ஆம் ஆண்டு “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தை இயக்கி டாப் இயக்குநர்கள் லிஸ்டில் சேர்ந்தார். இப்படத்தின் மூலம் தான் நயன்தாரா இவருக்கு அறிமுகமானார்.

ஹிட் லிஸ்ட்

2018 ஆம் ஆண்டு சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இப்படம் ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவரது இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படம் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

கெஞ்சும் விக்னேஷ்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவனின் அக்கவுண்ட் மீட்டெடுக்கப்பட்டது. இதனை அறிவிக்கும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; “என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்போ அப்போ இப்படி பண்ணுங்க” என்று தன் குழந்தையுடன் விளையாடும் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here