தசரா திரைப்படம் கடந்த 2 நாட்களில் ரூ.53 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தசரா. ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு குரி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். தசரா திரைப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சமுத்திரகனி, சாய்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

வசூல் வேட்டை

மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம், கடந்த இரண்டு நாட்களில் ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளதாக அதுவகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக போஸ்டருடன் எஸ்.எல்.வி சினிமாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வார இறுதியில் இன்னும் அதிகமாக இப்படம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்ஸ்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here