‘ஆர் ஆர் ஆர்’ படத்தை தமிழ் படம் என்று பிரியங்கா சோப்ரா கூறி இருப்பது தெலுங்கு ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் படமா?

கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலமானது. இப்படத்தில் இடம்பெற்று இருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இந்திய படங்களை ஹாலிவுட் திரையுலகம், பாலிவுட் படங்கள் என்றே குறிப்பிடுவார்கள். அந்த வகையில் ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் தொகுப்பாளர் ஆர் ஆர் ஆர் படத்தை பாலிவுட் படம் என குறிப்பிட்டு இருந்தார். தெலுங்கு படத்திற்கு கிடைத்த பெருமையையும், அடையாளத்தையும் மறைக்கப்பட்டு விட்டதாக தெலுங்கு ரசிகர்கள் தங்களது கன்னடங்களை அப்போதே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய பிரியங்கா சோப்ரா ஆர் ஆர் ஆர் படத்தை தமிழ் படம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட தெலுங்கு ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

கடுப்பான ரசிகர்கள்

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார் .அப்போது தொகுப்பாளர் பேசும்போது பாலிவுட் சினிமா தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறுகையில் குறுக்கே பேசிய பிரியங்கா சோப்ரா ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தானே கூறுகிறீர்கள். அது ஒரு தமிழ் படம் என்று கூறி உள்ளார் மேலும் தமிழில் இது போன்ற மிகப்பெரிய பிளாக் மாஸ்டர் படங்களை உருவாக்கி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் பிரியங்கா சோப்ரா மேல் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ராவை விளாசி வருகின்றனர். இவர் ஏற்கனவே பல மேடைகளில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தமிழ் படம் என்று கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here