வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாராட்டு மழையில் சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. முதல் படத்திலேயே பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட சூரி, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார். காமெடி நடிகராக இதுவரை இருந்து வந்த நடிகர் சூரி, தற்போது விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை தழுவி உருவாக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான டாப் ஹீரோக்களின் படங்களை விட நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் வசூலையும் வாரி குவித்து வருகின்றது.

அசத்திய சூரி

சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தைவிட விடுதலை படம் வசூலில் முந்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. பெரிய பெரிய ஹீரோக்களை மட்டும் நம்பி இருக்கும் முன்னணி இயக்குநர்களுக்கு மத்தியில் காமெடியனையும் ஹீரோவாக நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இந்த படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. மேலும் சூரி விஜய் சேதுபதி நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். வார இறுதியில் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here