குட்டி குழந்தையிடம் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் பேசிய வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் ஷூட்டிங்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் சூட்டிங் முடிந்த லியோ டீம், சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு சென்னையில் ஷூட்டிங்கை துவங்கியுள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், வீடியோ கால் மூலம் குழந்தையிடம் விஜய் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

குட்டி ரசிகை ஆசை

“விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என பல்லாவரத்தை சேர்ந்த குழந்தையின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த குட்டி ரசிகையின் விருப்பத்தை கேள்விபட்ட விஜய் உடனடியாக அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்து குழந்தையை மகிழ்வித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here