நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தசரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பெரிய பட்ஜெட்

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது தசரா திரைப்படம். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு குரி தயாரித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இப்படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் 15 கிலோ வரை எடை குறைத்தார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திற்கும் தசரா படத்தில் சமுத்திரகனி, சாய்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தசரா படக் குழுவினர் தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் கேக் வெட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றதால், இப்படத்தின் வெற்றிக்காக மிகவும் காத்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நானி ரசிகர்களும் இப்படத்தின் வெற்றிக்காக தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here