பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு நடனம் ஆடியதற்காக நடிகை சாயிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராவடி சாயிஷா

சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு வரிசையில் இந்த படமும் ஹிட்டானால் சிம்புவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும். நீண்ட நாட்களாக பத்து தல படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் லேட்டஸ்ட் அப்டேடாக நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா குத்தாட்டம் போட்ட “ராவடி” பாடல் வெளியானது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த நடிகை சாயிஷா, இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தனது கணவரின் விருப்பத்தை கேட்டபிறகு தான் குத்தாட்டம் போட தயாரானதாக நடிகை சாயிஷா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது “ராவடி” பாடலுக்காக இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் அதிர்ச்சி

பத்து தல படத்தில் நாயகி ஆக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரைவிட அதிக சம்பளம் பெற்று இருக்கிறார் சாயிஷா. 5 நிமிட பாடலுக்கு ரூ.40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஒட்டுமொத்தமாக 28 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு பேசப்பட்ட சம்பளம் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே. 5 நிமிட பாடலுக்கு சாயிஷா இவ்வளவு சம்பளம் கேட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாலே அவர்களுக்கு பல மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் நடிகை சமந்தாவுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்துள்ளனர். அந்த ரூட்டில் தற்போது அடுத்தபடியாக சாயிஷா இறங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here