நடிகர் விஜய் தனது மனைவியுடன் சேர்ந்து தானே தோசை சுட்டு சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உச்ச நடிகர்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். நடிகர் விஜய் சங்கீதாவை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்தார். விஜய் சங்கீதா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை, அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரியாணி நல்லா இறங்கும்

இந்நிலையில் விஜய்யும் சங்கீதாவும் இணைந்துள்ள பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டைனிங் ஹாலில் அமரும் விஜய்க்கு சங்கீதா இட்லி கொடுக்க வருகிறார். அப்போது விஜய், தனக்கு தோசை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் இருப்பதாக கூறி தானே தோசை சுட்டு அதை மனைவியுடன் சேர்ந்து டைனிங் டேபிளில் வைத்து சாப்பிடுகிறார். அப்போது பேசும் சங்கீதா தோசை என்றால் 3 வேளையும் சாப்பிடுவாங்க என்கிறார். மேலும் பிரியாணி என்றாலும் நல்லா இறங்கும் என்றும் நாளைக்கு லஞ்ச் பிரியாணி என்று சொன்னால் நைட்டே வயிறு காலியா வச்சிருப்பாங்க எனவும் விஜய்யின் பிரியமான உணவுகள் குறித்து கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here