நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை கூறி திரையுலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.

தமிழில் என்ட்ரி

மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றபிறகு 2002 ஆம் ஆண்டு தமிழன் படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் இவர், ஹாலிவுட்டிலும் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தன்னைவிட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, வாடகை தாய் மூலம் கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கும் தாயானார்.

ஓரங்கட்டப்பட்டேன்

தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் இருந்து விலகியதற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது, “எனக்கு பாலிவுட்டில் சிலருடன் பிரச்சினை இருந்ததால், பாலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டேன். படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்தன. அந்த அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் எனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் பாலிவுட்லிருந்து விலகி விட்டேன்” என கூறியுள்ளார். இதைக் கேட்ட திரை பிரபலங்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

பகிரங்க குற்றச்சாட்டு

நடிகை பிரியங்கா சோப்ரா கூறிய இந்த விஷயங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், நடிகை கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேற கரண் ஜோஹர் தான் காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் நிலவிவரும் பல சர்ச்சைகளைப் பற்றி குரல் கொடுத்து வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது பிரியங்கா சோப்ரா விஷயத்திலும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில்; “ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்தார். பாலிவுட்டிற்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும். நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு கரண் ஜோஹர் மட்டும் தான் காரணம்” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here