சொப்பன சுந்தரி பட ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சொப்பன சுந்தரி

‘லாக்கப்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். டார்க் காமெடி ஜானரில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் ட்ரீட்

சமீபத்தில் சொப்பன சுந்தரி படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ வெளியானது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சொப்பன சுந்தரி திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் போஸ்டருடன் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here