பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகயதற்கான காரணத்தை சொல்லியுள்ளார் நடிகர் ஜனார்த்தனன்.

பாசமான தம்பிகள்

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பமாக இருக்கும் இந்த தொடரில் நான்கு அண்ணன்களின் பாசமே முக்கியமான கதையாக உள்ளது. கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணன் கதாபாத்திரம் மிகவும் சுட்டித்தனமாகவும் பொறுப்பில்லாத பையனாகவும் இருக்கக்கூடியவர். காதலித்து வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு பல இன்னல்களுக்கு பிறகு மீண்டும் வீட்டில் இணைகிறார். தற்போது கண்ணன் கதாபாத்திரம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலையும் பெறுகிறார். கதிரும் ஹோட்டல் தொடங்கி தனியாக நன்றாக சம்பாதித்து வருகிறார். கண்ணன் மற்றும் கதிரும் நன்றாக சம்பாதிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சம்பளம் வந்தவுடன் பாதி சம்பளத்தை தனது செலவுக்காக எடுத்து வைத்துக் கொண்டு மீதி பணத்தை மட்டும் மூத்த அண்ணன் மூர்த்தியிடம் கொடுக்கிறார் கண்ணனும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும். மிகவும் சுயநலமாக யோசிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும் மற்றவர்கள் சம்பாதிப்பதை ஏளனமாக பேசும் கண்ணனும் கடந்த சில நாட்களாக நெகட்டிவ் கதாபாத்திரங்கள் போல இருந்து வந்தது.

பிரிக்கப்படும் ஜீவா

இந்நிலையில் ஜனார்த்தனனின் ( ஜீவாவின் மாமனார்) இரண்டாவது மகளின் திருமணத்தில் மொய் வைக்கும் விஷயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தனர். அனைவரும் தனித்தனியாக மொய் வைக்க , ஜீவாவின் பெயர் மட்டும் விடுபட்டு விட்டது. இதனால் கோபமடைந்த ஜீவா, மனதில் இருக்கும் தனது பிரச்சனைகள் அனைத்தையும் மூர்த்தியிடம் கேள்வி கேட்டு, பிறகு வீட்டை விட்டு பிரிகிறார். அதேபோல் மொய் வைக்கும் விஷயத்தில் தவறு செய்த கண்ணனை பலர் முன்னிலையில் அடிக்கிறார் மூர்த்தி. இதனால் கோபம் அடையும் ஐஸ்வர்யா வீட்டில் வந்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் கூறி கண்ணனையும் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறார். விறுவிறுப்பாக செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சாய் காயத்ரி (ஐஸ்வர்யா) வெளியே வந்ததற்கான காரணத்தை ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

ஏத்துக்க முடியாது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை மற்றும் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சாய் காயத்ரி தொடரை விட்டு விலகினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ஒரு கால்பந்து வீரரை கிரிக்கெட் விளையாடச் சொன்னால் விளையாட முடியுமா?” என்று பதில் அளித்தார். இதை கேட்ட ஜீவாவின் மாமனாராக நடிக்கும் ஜனார்த்தனன் நடிகர் என்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். அதுதான் அவர்களது வேலை அவர் கூறும் காரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு இதெல்லாம் பிரச்சினையாக இருக்காது. சாய் காயத்ரி நல்ல நடிகை, அவருக்கு வேற ஏதோ பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் இந்த தொடரை விட்டு விலகி விட்டார் என்று ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here