விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழில் தொடங்கப்படும் புதிய தொடரில் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஹிட் சீரியல்

ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை துவங்கிய மிர்ச்சி செந்தில், எவனோ ஒருவன், கண் பேசும் வார்த்தைகள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதன்பிறகு மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜா சந்திரனை காதலித்து 2014 ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது செந்தில் எந்த தொடரில் நடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விடை கிடைத்துள்ளது.

புதிய தொடர்

ஜீ தமிழில் துவங்க இருக்கும் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் மிர்ச்சி செந்தில். மேலும் இந்த தொடர் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு தங்கையாக பாக்யலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். மிர்ச்சி செந்தில் ஏற்கனவே ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் ஃபோருக்கு ஜட்ஜ் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here