உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட்டான “அவதார்: த வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் OTTயில் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டை

தென்னிந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் பல ஹாலிவுட் படங்கள் இங்கு வெற்றி பெற்று இன்றும் முன்னணியில் உள்ளது. அந்த வரிசையில் தான் தற்போது அவதார் 2 படமும் சேர்ந்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியான அவதார் 2 திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல்வேட்டை நடத்தியது. “அவதார்: த வே ஆஃப் வாட்டர்” படத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலகளவில் அதிகம் வசூலித்த படங்களில் அவதார் முதல் பாகம். ரூ.23,968 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் ரூ.22,319 கோடி வசூலித்து இரண்டாம் இடத்திலும், அவதார் 2 மூன்றாம் இடத்திலும் உள்ளது.

OTTயில் வெளியீடு

கடந்த சில மாதங்களாக வசூல்வேட்டை நடத்தி வரும் “அவதார்: த வே ஆஃப் வாட்டர்” திரைப்படத்திற்கு 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு இந்த திரைப்படம் OTTயில் வெளியாகி உள்ளது. நேற்று இரவு அமேசான் பிரைம், ஆப்பிள் டி, வூட் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறவிட்ட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாகவே அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here