பதான் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக 10 கோடிக்கு கார் வாங்கியுள்ளார் நடிகர் ஷாருக் கான்.

பிளாக் பஸ்டர்

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் ஏற்பட்ட நெப்பாடிசம் சர்ச்சையால் தூங்கி கிடந்த பாலிவுட் திரையுலகம் பதான் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க துவங்கி உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

புதிய கார்

பதான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், சல்மான் கான், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியிடப்பட்டது. அமேசான் பிரைமில் வெளியான இதை திரைப்படம் ஓடிடியிலும் சாதனை படைத்து வருகின்றது. ஜனவரி மாதம் வெளியான இந்த திரைப்படத்தின் வைப்ஸ் இன்றும் குறையாமல் உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக 10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லியன் பிளாக் கார் வாங்கியுள்ளார் நடிகர் ஷாருக்கான். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த படத்தின் வெற்றி காரணமாக ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் என்பதாலும், ஷாருக்கான் நாயகன் என்பதாலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் ஜவான் திரைப்படமும் வசூல் வேட்டையை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here