கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை பவானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிக் பாஸ் புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி, உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் பாவனி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 5இல் பவானியின் சக போட்டியாளரான அமீர் தனது காதலை பாவனியிடம் கூறினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே அமீர் பவானியை காதலித்து வந்தார். மேலும் பல முறை தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார். ஆனால், ஏற்கனவே திருமணம் ஆகி தன் கணவனை இழந்த பாவனி பல தயக்கத்திற்குப் பிறகு காதலை ஏற்றுக் கொண்டார்.

நெருக்கமான புகைப்படங்கள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது சிறப்பான நடனத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர். இவர்களுக்கு கிடைத்த இந்த பிக் பாஸ் வாய்ப்பு சினிமாவில் என்ட்ரி கொடுக்கவும் உதவியது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இருவரும் நடித்திருந்தனர். எப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சமூகவலைத்தளத்தில் பல முறை கேள்வி எழுந்தது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள ஒரு வருடம் ஆகும் என்றும் இவர்கள் கூறியிருந்தனர். எப்பொழுதும் சோசியல் மீடியாவில் தனது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பவானி, சமீபத்தில் அமீருடன் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

கர்ப்பம் இல்லை

இந்நிலையில் சமீபத்தில் பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததை ஏன் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாவனி. கடந்த மாதத்தில் நான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். அடுத்ததாக நாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறினார்கள். தற்போது எங்களுக்கு திருமணம் நடந்ததாகவும் கூறுகிறீர்கள் அடுத்து என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி கேட்டு பாவனி கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here