இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சோனியா அகர்வாலுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து ஹிட்

2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி கதாநாயகிகளின் லிஸ்டில் சேர்ந்து கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு இவர் நடித்த கோவில், மதுர, 7/ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகவே அமைந்தது. இயக்குநர் செல்வராகவனை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் சோனியா அகர்வால். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சோனியா.

சிறப்பான கதாபாத்திரம்

காதல் கொண்டேன் படத்தில் திவ்யா கதாபாத்திரம், கோவில் படத்தில் ஏஞ்சல் தேவி கதாபாத்திரம், 7/ஜி ரெயின்போ காலனியில் அனிதா மற்றும் புதுப்பேட்டையில் செல்வி உள்ளிட்ட பல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் சோனியா அகர்வால். தற்போது பகீரா, காதலை தேடி நித்தியானந்தா, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்து இன்றும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சோனியா அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள். இவரது பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here