சாகுந்தலம் படத்தின் 3 டி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் அப்படக்குழுவினர்.

நீண்ட எதிர்பார்ப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பை இப்படக்குழு வெளியிட்டு இருந்தது. காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற புராண கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், சாகுந்தலையாக சமந்தாவும், துஷியந்தனாக தேவ்மோனும் நடித்துள்ளனர்.

3டி டிரெய்லர்

இந்நிலையில் இப்படம் வெற்றி பெற வேண்டி சமீபத்தில் சமந்தா மற்றும் சாகுந்தலம் பட குழுவினர் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ போடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய படத்தின் புதிய அப்டேடாக சாகுந்தலம் படத்தின் 3டி டிரெய்லரை பட குழு வெளியிட உள்ளது. இந்த நிகழ்வு நாளை மாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த அசத்தலான அப்டேட்டை போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாகவே அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here