தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நடிகை நிவேதா பெத்துராஜை பார்த்த ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் வாங்கி சென்றனர்.

தமிழில் பல பிளாப்

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா.

டிக்கெட் விற்ற நிவேதா

தெலுங்கில் பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நிவேதா பெத்துராஜ், பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் இவர் நடிப்பில் “தஸ் கா தம்கி” திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது . நேற்று வரை இப்படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தியேட்டரில் டிக்கெட்டுகளை விற்று இப்படத்தை பிரமோஷன் செய்து வந்தார். படத்தின் நாயகியே டிக்கெட் விற்கிறார் என்று கேள்விப்பட்ட ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் வாங்கிச் சென்றனர். தெலுங்கில் ராசியான நடிகை என பெயர் வாங்கி உள்ளதால், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here