அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கிய கோவை குணா உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேடை கலைஞர்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்கிற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் மிமிக்கிரி கலைஞராகவும் இருந்து வந்துள்ளார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் கோவை குணா, மதுரை முத்துவுடன் இணைந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். டிவி மட்டுமின்றி திரைப்படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். சென்னை காதல் என்ற படத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்து வந்த பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். டிவி, மேடை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா, உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here