நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் காமெடி நாயகனாக மாறியுள்ளார் நடிகர் பகத் ஃபாஸில்.

வில்லன் அவதாரம்

மலையாள நடிகரான பகத் ஃபாஸில் 2002 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். தனது எதார்த்த நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் வசப்படுத்திய அவர், சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். ஜாலியாகவும், எதார்த்தமாகவும் நடிக்கும் நடிகர் பகத் ஃபாஸில் சமீபகாலமாக சீரியஸான படங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாலிக், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனால் ஜாலியாகவும், காமெடியாகவும் நடிக்கும் பகத் ஃபாஸில் படங்களை ரசிகர்கள் சில நாட்களாக மிஸ் செய்து வந்தனர்.

காமெடி

தற்போது இவர் “பாச்சுவும் அற்புத விளக்கும்” என்ற படத்தில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. சமீபத்தில் வெளியான இதை படத்தின் டீசர் பார்ப்பதற்கு காமெடியாகவும் இருப்பதால் பேமிலி ஆடியன்ஸை கண்டிப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. “பாச்சுவும் அற்புத விளக்கும்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பகத் ஃபாஸில் தற்போது தமிழில் மாமன்னன் என்ற படத்திலும், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் பாட்டு படத்திலும், புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் “பாச்சுவும் அற்புத விளக்கும்” படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here