சினிமாவில் தனது கிடைத்த அங்கீகாரத்தை பற்றி நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழில் ஆர்வம்

பழனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. எனவே தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்தின் மூலம் கம்பாக் கொடுத்தார். அதன்பிறகு, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

மகிழ்ச்சியான அம்மா

முன்னணி நடிகையாக இருக்கும் சமயத்தில் கௌதம் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் காஜல். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலிடம் அம்மா காஜல் எப்படி இருக்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது; “ரொம்ப சவாலலாக உள்ளது. அதேசமயம் ரொம்ப தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. என் வேலையை திட்டமிட்டு செய்கிறேன். எனக்கு எப்பவுமே சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். கணவர் குழந்தைக்கு நான் தான் சமைக்கிறேன். குழந்தைக்கு அதிகளவில் சூப் காய்கறிகள் கொடுத்து பழக்கப்படுத்துகிறேன். மொத்தத்தில் நான் மகிழ்ச்சியான அம்மா என்று கூறியுள்ளார்.

நல்ல நடிகர்கள்

மேலும் சினிமாவில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பற்றியும் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். தமிழில் நான் நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம். அது மட்டுமில்லாமல் ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. இந்த இரண்டு படத்திலும் கார்த்தியுடன் நடித்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. சூர்யா, கார்த்தி இருவரும் மிகவும் நல்ல நடிகர்கள். சூர்யா அதிகமாக பேச மாட்டார். கார்த்தி எப்பவுமே கலகலப்பாக பேசிக்கொண்டே இருப்பார். விஜய் அதிகமாக பேச மாட்டார். வேலையில் எப்பொழுதும் கவனமாக இருப்பார்” என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here