வசூல் சாதனை படைத்த வாத்தி படத்தின் விவரத்தை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

தெலுங்கில் வெற்றி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி. தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வந்த நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். சார் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் மூலம் தெலுங்கு ஆடியன்சையும் தன் வசப்படுத்தியுள்ளார் தனுஷ்.

வசூல் வேட்டை

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிக அளவில் தெலுங்கு நடிகர்களே அப்படத்தில் நடித்திருந்தனர். ஏற்கனவே பல கதைகள் இதுபோல் வந்திருந்தாலும், ஆசிரியராக நடித்திருந்த தனுஷின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. சுமார் ரூ.30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரை ரூ.100 கோடி வரை வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய அப்டேட்டில் உலக அளவில் வாத்தி திரைப்படம் ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்பதை போஸ்டர் மூலம் வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here